தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவியில் சீசன் களைகட்டும் இங்குள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்பரித்து வரும் தண்ணீரில் குளிக்க நாடெங்கிலும் இருந்து லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது அதே போல் இந்தாண்டும் இரண்டாவது அலையால் தற்போது வரை சுற்றுலா தலங்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தின் பலபகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நேற்று முதல் பெய்து வந்த மழையால் பிரதான அருவியான குற்றால அருவில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவை தாண்டி கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்: ச.செந்தில் (தென்காசி)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.