Home /News /tamil-nadu /

ஹலால் இறைச்சி விவகாரம் : முஸ்லீம் முன்னேற்றகழக மாநில செயலாளர் கண்டனம்

ஹலால் இறைச்சி விவகாரம் : முஸ்லீம் முன்னேற்றகழக மாநில செயலாளர் கண்டனம்

ஹலால் இறைச்சி விவகாரம்

ஹலால் இறைச்சி விவகாரம்

Halal meat issue : கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக அரசு தேர்தலில் தோற்றுவிடுமோ எனும் பயத்தில் இவ்விதம் செய்வதாக கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தவர்களை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றகழக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றகழக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் தெரிவிக்கையில், கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக அரசு தேர்தலில் தோற்றுவிடுமோ எனும் பயத்தில் இவ்விதம் செய்வதாக கூறியுள்ளார். மேலும் ஹிஜாப் தடை தொடரும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அம்மாநிலத்தில் ஹலால் இறைச்சி பிரச்சனையை இந்துவ அமைப்புகள் (பஜ்ரங்கள்) குறிவைத்து உள்ளது என கூறியுள்ளார்.

    ALSO READ | 'தமிழ்நாட்டில் ஒருபோதும் காவி வர முடியாது' - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

    தொடர்ந்து பேசிய அவர், கோவில் திருவிழாவில் இஸ்லாமிய வியாபாரிகள் கடை நடத்தக்கூடாது என தொடர்ந்து மிரட்டப்படுவதாக கூறியுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி