தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரையில் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்ததுமான தக்ஷிணாமூர்த்தி திருக்கோயில் தமிழ் மாத புத்தாண்டு மற்றும் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக கேரளா எல்லைப்பகுதியும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆலயத்தில் குருபகவான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார் துவாததி திசியும் பூரம் நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நேற்று நள்ளிரவு 1.42 மணிக்கு குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை முன்னிட்டு காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் விஷ்ணு சுத்த ஹோமம், லட்சுமி ஹோமம், மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தபின்னர் குருபாகவன் குருபெயர்ச்சியின் போது சிறப்பு தீபாரதனையுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு குருபெயர்ச்சி விழாவை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் காரணமாக குரு பெயர்ச்சி விழாவில் அரசு கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்த நிலையில் தற்போது தொற்று இல்லாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Guru pooja, Gurupeyarchi, Tamil New Year