தென்காசியில் விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள சாயமலை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது தாயார் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இதனால், வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில் வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மைதீன் பட்டாணி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அழகுராஜா, இதுகுறித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருவேங்கடம் வட்டாட்சியரிடம் வழங்கினார். பணத்தை வட்டாட்சியர் பெற்றுக்கொண்டது தெரிய வந்ததும் அவரை டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து தொடர்ந்து விடிய விடிய நடந்த விசாரணையில் அதிகாலை வரை தொடர்ந்து பின்னர் அவரை கைது செய்து திருநெல்வேலிக்கு அழைத்து சென்றனர். வாரிசு சான்றிதழ் வழங்க லட்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ச.செந்தில்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.