Home /News /tamil-nadu /

முழு ஊரடங்கு : தென்காசியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய போலீசார்

முழு ஊரடங்கு : தென்காசியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய போலீசார்

முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தென்காசியில் போலீசார் சார்பாக ஆதரவற்ற மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துவருகிறது. அதனையடுத்து, தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்திவருகிறது.

    இதையும் படிங்க :  ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - அரசு அறிவிப்பு

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. திருமணம் போன்ற நிகழ்வுகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 100 பேருக்கு மிகாமல் திருமணத்தை நடத்திக்கொள்ள வேண்டும். திருமணத்திற்கு செல்வோர் பத்திரிக்கைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல், நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

    முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள சூழலில், தென்காசியில் போலீசார் சார்பாக ஆதரவற்ற மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், புதிய பேருந்துநிலையம், மற்றும் சாலையோர மரத்தடியில் இருந்த ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கினார். போலீசாரின் இந்த மனிதாபிமான செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    செய்தியாளர் : ச. செந்தில்
    Published by:Musthak
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி