Home /News /tamil-nadu /

மாமியாரை தரக்குறைவாக பேசிய மருமகனை வெட்டி கொன்ற மாமனார்: திருமணமாகி 6 மாதத்தில் நடந்த துயரம்!

மாமியாரை தரக்குறைவாக பேசிய மருமகனை வெட்டி கொன்ற மாமனார்: திருமணமாகி 6 மாதத்தில் நடந்த துயரம்!

மருமகனை வெட்டி கொன்ற மாமனார்

மருமகனை வெட்டி கொன்ற மாமனார்

திருமணமான 6வது மாதத்திலேயே மாமனாரால் மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் வரதட்சனை கேட்டு மாமியாரை தரக்குறைவாக பேசிய மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மேலக்கடையநல்லூர் இந்திரா காலணியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் கற்பகஜோதியை புளியங்குடி டி.என்.புதுக்குடி கற்பக வீதியை சேர்ந்த சரத்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

அப்போது வரதட்சனையாக 5 சவரன் நகை போடுவதாக பேசி, திருமணத்தின் போது 2 சவரன் நகை போட்ட நிலையில், நேற்று புளியங்குடிக்கு தனது மகளுக்கான தலைப் பொங்கல் பொடி பொட்களையும், 3 சவரன் நகைகளையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது மருமகன் சரத்குமார் மாமியாரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாமனார் மற்றும் மாமியார் இருவரும் கடையநல்லூருக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அன்று இரவே கடையநல்லூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த மருமகன் சரத்குமார் மாமனாரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

Also read... தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் கண்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மருமகனை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மாமனார் கண்ணணை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6வது மாதத்திலேயே மாமனாரால் மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி