Tenkasi District : அதிகாரிகள் நெல்லை எடை போடமாட்டுக்காங்க, குளறுபடி பண்றாங்க என விவசாயிகள் மனவேதனையில் சாலையில் நெல்லை கொட்டிய செயல் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 1000 மூட்டைகள் நெல் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்குவதாகவும் அதன் பின்னர் சாக்குகள் இல்லை எனவும் தெரிவித்ததால் தற்போது குவியல் குவியலாக நெல்மூட்டைகள் தேங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பிசான சாகுபடியில் நெல் நடவு செய்தனர். தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய ஆண்டுதோறும் அரசு ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். அதன்படி கடையநல்லூர் ஒழுங்கு விற்பனைக்கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இதையடுத்து அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொண்டுவந்தனர். ஆனால், முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் தேக்கம் அடைந்துள்ளது. ஏராளமான குவியல்களில் நெல்லை கொட்டி வைத்து, விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். நீண்ட நாட்களாக நெல்லை பாதுகாத்து வருவதால் தங்கள் சொந்த வேலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய பெருமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது 3 மாதம் கஷ்டப்பட்டு நெல் நடவு செய்து வனவிலங்குகள் மத்தியில் அதை பாதுகாத்து தற்போது நெல் அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைகாக கொண்டுவந்தோம். ஆனால் தினந்தோறும் சுமார் 1000 மூட்டைகளை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வாங்குவதாகவும் அதன் பின்னர் சாக்குகள் இல்லை எனவும் தெரிவித்ததால் தற்போது குவியல் குவியலாக நெல்மூட்டைகள் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் வேலாயுதபுரத்தில் சேர்ந்த விவசாயி மனதளவில் பாதிக்கப்பட்டு நெல் மூட்டைகளை மதுரை செல்லும் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது பின்னர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
செய்தியாளர்: ச.செந்தில் (தென்காசி)
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.