குடும்பத் தகராறில் விபரீத முடிவு எடுத்த பெண் - குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை

தற்கொலை செய்துக்கொண்ட பெண்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ் - கனகா இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக கணவர் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

  • Share this:
    குடும்பத் தகராறு காரணமாக தென்காசியைச் சேர்ந்த இளம்பெண் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென்காசி மாவட்டம் செக்கடியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் கனகா என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. சுரேஷ் வெளிமாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வந்தார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவரிடம் கோபித்துக்கொண்டு கனகா தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    குடும்ப பிரச்னை காரணமாக சுரேஷ் மீது ஆலங்குளம் காவல்நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு கனகா புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் தொடர்பாக இருவரையும் காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சுரேஷை எச்சரித்த போலீஸார் கனகாவுடன் சண்டையில்லாமல் குடும்பம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கனகா தனது கணவர் சுரேஷூடன் செக்கடியூர் சென்றார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ் - கனகா இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கணவன் மீது இருந்த கோபத்தில் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மூவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் சடலமாக இருந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த சம்பவம் குறித்து உடனடியாக கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் 3 பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: