'பழுதடைந்த மின் கம்பத்தால் அச்சம்'... அதிகாரிகள் அலட்சியம் - பொதுமக்கள் புகார்
'பழுதடைந்த மின் கம்பத்தால் அச்சம்'... அதிகாரிகள் அலட்சியம் - பொதுமக்கள் புகார்
உருக்குலைந்த மின் கம்பத்தால் அச்சம்
Tenkasi District | மக்கள் அதிகம் செல்லும் பகுதியில் எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் இராஜபாளையம் செல்லும் சாலையில் இந்திரா நகர் காலணி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அந்த பகுதியில் மின் கம்பம் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் வாரிய அலுவலர்கள் முறையாக மின் கம்பத்தை பராமரிக்காததால் தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட மின் கம்பம் பழுதடைந்துள்ளது. குறிப்பாக தலைப்பகுதியில் சிமென்ட் தளம் பெயர்ந்து, வெறும் இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளன.
இந்த வழியில் 24 மணி நேரமும் கிராம மக்கள் மற்றும் வாகனங்கள் இவ்வழியாக அதிக அளவில் செல்வார்கள். மேலும் 6 மாதமாக மின்கம்பம் பழுதடைந்தும், எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தர வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மின்வாரியத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் மின்கம்பத்தை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : ச.செந்தில்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.