• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி - எடப்பாடி பழனிச்சாமி

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி - எடப்பாடி பழனிச்சாமி

Edapadi palanisamy

Edapadi palanisamy

திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றுவது இல்லை. மேலும் விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு திமுக அரசாங்கம்

  • Share this:
    விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு திமுக அரசாங்கம் என தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    தமிழகத்தில் 9 மாவட்டங்கில் 2 கட்டமாக நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன், கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்,

    இந்த நிகழ்வின்போது அதிமுக  முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் மாவட்ட, நகர, பேரூர் கழக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்தில்
    ஆளுங்கட்சியாக இருந்ததை விட, எதிர்கட்சியாக இருக்கும் போது தான் அதிக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் எப்போதோ முடிந்திருக்க வேண்டும்.  நீதிமன்ற உத்தரவுப்படி தான் திமுக இந்த தேர்தலை நடத்துகிறது. வரும் தேர்தலில் தென்காசி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

    Also Read:  ஆட்டோ ஓட்டுநரை பழிவாங்க 22 கிமீ பயணம் செய்து வந்த குரங்கு – ஒரு திகில் அனுபவம்!

    கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் நாம் தோல்வியடைந்திருக்கிறோம். மேலும் கிராமப்புற பகுதிகளில் நமக்கு வாக்குகள் அதிகமாக உள்ளது அதனை நல்ல முறையில் அறுவடை செய்ய வேண்டும் என்றார். இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கட்சி வேட்பாளர்கள் அனைவரை ரும்  வெற்றி பெற செய்ய பாடுபாட வேண்டும்.

    திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகள் வெளியிட்டது. தமிழக வரலாற்றில் எந்த கட்சியும் இவ்வளவு அறிவிப்புகள் வெளியிட்டது இல்லை.  திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றுவது இல்லை. மேலும் விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு திமுக அரசாங்கம் என்றார்.

    Also Read:  சென்னையில் ஜனவரி முதல் ‘ஒரு தேசம் ஒரு அட்டை’ திட்டம் துவக்கம்! – மொபிலிட்டி கார்டின் பயன்கள் என்ன?

    தொடர்ந்து பேசிய அவர் கூட்டுறவு சங்கத்தில் 5 சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்தவர்களின் கடன் தள்ளுபடி என திமுக அறிவித்தது. ஆனால் இதற்கு திமுக அரசு பல்வேறு விதிகளை விதித்து இந்த அறிவிப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    வாக்குகளை பெறுவதற்கு கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டு இன்று மக்களை ஏமாற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தில் ஒருவருக்கு தான் கூட்டுறவு கடன் தள்ளுபடி என தெரிவிக்காமல் அறிவித்து விட்டார் என்றார் எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அனைவரும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார்.

    செந்தில் - செய்தியாளர், தென்காசி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: