ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வன விலங்குகளால் விளைநிலங்கள் சேதம்... உரிய நிவாரணம் வழங்க தென்காசி விவசாயிகள் கோரிக்கை

வன விலங்குகளால் விளைநிலங்கள் சேதம்... உரிய நிவாரணம் வழங்க தென்காசி விவசாயிகள் கோரிக்கை

காட்டு யானைகள்

காட்டு யானைகள்

Tenkasi District | மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகளான யானை, காட்டுபன்றி, தொடர்ந்து இப்பகுதியில் வருவது வாடிக்கையாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை , வாழை மரங்களை சேதப்படுத்தியதால் யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் தென்னை, வாழை மா, உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லாறு பகுதிகளில் ஏழு யானைகள் கூட்டமாக வந்து தென்னை வாழை, தோப்பில் புகுந்து  ஏராளமான தென்னை வாழை   மரங்களை பிடுங்கி எறிந்தது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இது குறித்து விவசாயி  வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்ததன் பேரில் உடனே  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லாறு பீட் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனக்காப்பாளர்கள் யானைகளை வெடிவைத்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். மேலும் விவசாயிகள் கூறும் போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகளான யானை, காட்டுபன்றி, தொடர்ந்து இப்பகுதியில் வருவது வாடிக்கையாக உள்ளது.

எனவே வனத்துறையினர் அகழி வெட்டியும், மின்சார வேலியை அமைத்தும் வனவிலங்குகளை விளை நிலங்களுக்குள் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

ச.செந்தில், செய்தியாளர்

First published:

Tags: Elephant, Tenkasi