போலீஸ் மீது சாக்காடை நீரை எடுத்து வீசிய சம்பவம்... போதை ஆசாமி வழக்கில் வாண்டேடாக சிக்கியது எப்படி?

Youtube Video

தென்காசி மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற போலீசாரை சாக்கடைநீரை ஏடுத்து வீசி தாக்கிய போதை ஆசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

  • Share this:
    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த கல்லத்தி குளம் கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான அசோகன். சென்னையில் டீ கடை ஒன்றில் பணியாற்றி வந்த அவர், கொரோனா ஊரடங்கால் சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார். மதுபழக்கத்திற்கு அடிமையான அசோகன் தினமும் குடித்துவிட்டு பிரச்னையில் ஈடுபடுவதும் சாலையில் செல்வோரை தாக்குவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    கடந்த 22 ஆம் தேதி அதே ஊரை சேர்ந்த அய்யாதுரை என்பவரை போதையில் அசோகன் தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக அய்யாதுரை சின்ன கோவிலான்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அசோக்கிடம் விசாரணை செய்ய காவலர் பாலகிருஷ்ணன் அசோகன் வீட்டிற்கு வந்துள்ளார்.

    Also Read : கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர்

    ஆனால் அப்போதும் போதையில் இருந்த அசோகன் காவலரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது வைரலாகிவருகின்றது. அசோகன் அதிகளவு போதையில் இருந்ததால் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார் காவலர் பாலகிருஷ்ணனன்.

    ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவித்த அசோகன் காவலரை ஆபாசமாக திட்ட தொடங்கியுள்ளார். அசோகனின் சேட்டைகளை கண்டுகொள்ளாத காவலர் பாலகிருஷ்ணன் தொடர்ந்து அமைதியாக தனது பணியை செய்துள்ளார். ஆனால் அடங்காத அசோகன், காவலரின் பணியை தடுக்கும் வகையில் அவர் மீது அருகில் இருந்த சாக்கடை சேற்றை எடுத்து வீசியுள்ளார்.

    Also Read : திமிங்கலம் உமிழ்ந்த மெழுகு கள்ளச்சந்தையில் விற்பனை.. ரூ 2 கோடி மதிப்புள்ள அம்பர்கீரிஸ்-வுடன் 6 பேர் கைது..

    மேலும் காவலரின் வாகனத்தையும் தாக்கியதுடன், அவரின் தலைகவசத்தையும் தூக்கி வீசியுள்ளார். இதையடுத்து காவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கொடுத்த புகாரையடுத்து அசோகன் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், அவமானபடுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    போதையின் உச்சத்தில் இருந்த அசோகனை பிடித்த போலீசார் காவல்நிலையத்தில் வைத்து போதையை தெளிய வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: