திமுக புறக்கணித்ததன் காரணமாக குற்றாலம் பேரூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
திமுக புறக்கணித்ததன் காரணமாக குற்றாலம் பேரூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
குற்றாலம் பேரூராட்சி
Tenkasi District : இதுகுறித்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூறும்போது மக்களின் அடிப்படை தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது எனவும் இரண்டு முறை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் கலந்துகொள்வில்லை என கூறியுள்ளனர்.
குற்றாலம் பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் தேர்தலை திமுக புறக்கணித்ததன் காரணமாக தேர்தல் நடுத்தும் அலுவலர் இரண்டாவது முறையாக ஒத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் பிரதானமாக குற்றாலம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் நடைபெற்று முடிந்த பேரூராட்சி தேர்தலில் குற்றாலத்தில் உள்ள 8 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக 4 க்கு 4 என்ற விகிதத்தில் சம அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் பேரூராட்சியில் மறைமுக தலைவர், துணைத்தலைவர் தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர், திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். இதனை தொடர்ந்து தேர்தலுக்கான கால அவகாசம் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாவது முறையாக தேர்தலை ஒத்திவைப்பதாக ராஜமனோகரன் தேர்தல் நடத்தும் அலுவலர் (உதவி ஆணையர் கலால்) அறிவித்தார்.
இதுகுறித்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூறும்போது மக்களின் அடிப்படை தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது எனவும் இரண்டு முறை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் கலந்துகொள்வில்லை. மேலும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் போது மீண்டும் நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.