'குற்றாலம் அருவிப் பகுதி கடைகளை பொது ஏலம் விடுவதில் வெளிப்படைதன்மை இல்லை' - வியாபாரிகள் குற்றச்சாட்டு
'குற்றாலம் அருவிப் பகுதி கடைகளை பொது ஏலம் விடுவதில் வெளிப்படைதன்மை இல்லை' - வியாபாரிகள் குற்றச்சாட்டு
Tenkasi District : இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஏலத்தில் வெளிப்படை தன்னை இல்லாமல் பழைய குத்தகைதாரர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலத்தை அவர்களுக்கே விட முயற்ச்சித்து வருகின்றனர். இதனால் பேரூராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சார்பில் பேரருவி, ஐந்தருவி பகுதிகளில் உள்ள கடைகள் ஏலம் விடுவதாக கூறிவிட்டு தற்போது ஒத்திவைக்கபட்டதற்கு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜீன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குற்றால அருவிகளில் நீராடி உற்ச்சாகமாக செல்வது வழக்கம். இதையொட்டி குற்றால பேரூராட்சி சார்பில் அருவிகரையோரம் உள்ள கடைகள், வாகன காப்பகம், பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்டவைகள் பொது ஏலம் விடப்படும்.
இந்நிலையில் இந்த ஏலமானது இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கபடுவதாக குற்றாலம் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது ஏலத்தில் கலந்து கொள்ள வந்த வியாபாரிகள் கூறுகையில், ஏலம் விடுவதாக கூறப்பட்ட நிலையில் தாங்கள் அதற்கென வரைவு காசோலைகள் எடுத்து ஏலத்திற்கு தயாராக வந்துள்ளோம். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் ஏலத்தில் வெளிப்படை தன்னை இல்லாமல் பழைய குத்தகைதாரர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலத்தை அவர்களுக்கே விட முயற்ச்சித்து வருகின்றனர். இதனால் பேரூராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே பொது ஏலத்தில் வெளிப்படைதன்மை வேண்டும் மேலும் குற்றாலம் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தனர்.
ச.செந்தில், செய்தியாளர், தென்காசி மாவட்டம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.