• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அடம்பிடிக்கும் பேருந்துகள்.. காற்று வாங்கும் புளியங்குடி புறநகர் பேருந்து நிலையம் - சாலையில் காத்திருக்கும் பொதுமக்கள்

அடம்பிடிக்கும் பேருந்துகள்.. காற்று வாங்கும் புளியங்குடி புறநகர் பேருந்து நிலையம் - சாலையில் காத்திருக்கும் பொதுமக்கள்

பேருந்து நிலையம்

பேருந்து நிலையம்

புளியங்குடி சிந்தாமணி புறநகர் பேருந்துநிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள் பயணிகள் கடும் அவதி.

  • Share this:
    தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி புறநகர் பேருந்துநிலையத்தை புறக்கணிப்பதால் முதியவர்கள், பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணியில்  30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இங்கு நகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆட்சியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது மேலும் இந்த பகுதியில் மருத்துவமனைகள் வணிக நிறுவனங்கள், கல்லூரி பள்ளிகூடங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன .

    Also Read: டிரைவர் அண்ணே கியர் ராடு எங்கண்ணே.. பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் அரசுப்பேருந்து

    மேலும் புளியங்குடியில் உள்ள நகர பேருந்து நிலையத்தை விட சிந்தாமணி பேருந்து நிலையம் அதிக பரப்பளவைக் கொண்டதாகும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து பேருந்துகளும் முழுமையாக வந்து கொண்டிருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில் சில மாதங்களாக அனைத்து பேருந்துகளும் உள்ளே வரமால் புறக்கணித்து வருகின்றனர் இதனால் இப்பகுதி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் மதுரை செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் பஸ் நிலையத்தில் அருகே 300 அடி தூரத்தில் உள்ள சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.

    Also Read: ஃபேஸ்புக்கில் காதல் வலை.. வாட்ஸ் அப்பில் செக்ஸ் பேச்சு.. 50 வயது தொழிலதிபரிடம் பணம் கறந்த பெண்..

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் மேலும் பேருந்துகள் பஸ் நிலையத்துக்கு வருமா அல்லது அருகில் உள்ள சாலையில் நிறுத்தப்படும் என சந்தேகத்தில் பயணிகள் பரிதவிக்கின்றனர் எனவே சிந்தாமணி புறநகர் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகள் வந்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செய்தியாளர்: ச.செந்தில் (தென்காசி)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: