• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்குமாறு பாஜக ஆர்ப்பாட்டம்!

குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்குமாறு பாஜக ஆர்ப்பாட்டம்!

Courtallam

Courtallam

குற்றால அருவிகள் மட்டும் இதுவரை திறக்க அனுமதிக்கவில்லை

  • Share this:
    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றால அருவியை திறக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில்  கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் போன்ற அருவிகளில் குளித்து மகிழ்வதற்காக பொதுமக்கள் படையெடுத்து வருவது வழக்கம். மேலும்  இதமான சாரல் மற்றும் சூழலை அனுபவிப்பது பொதுமக்களுக்கு சுகமான அனுபவமாக அமையும்.

    இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் தொற்று குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

    Also read:  லக்கிம்பூர்கேரியில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்தை சந்தித்ததற்காக விவசாயிகளின் போராட்ட குழு தலைவர் சஸ்பெண்ட்!

    குற்றால அருவிகள் மட்டும் இதுவரை திறக்க அனுமதிக்கவில்லை இதனால் இங்குள்ள வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவதால் உடனடியாக அருவியை திறக்க கோரியும் குற்றாலநாதர் கோவிலில் உள்ள வாடகை ரத்து செய்யக்கோரியும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராமராஜா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்தில் - செய்தியாளர், தென்காசி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: