பிச்சைக்காரரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை.. டீ குடிக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

பிச்சைக்காரரிடம் கொள்ளை

மூட்டையில் சிறுக சிறுக சேர்ந்த பணம் இரண்டு லட்சம் இருந்ததாக கடைக்காரர்களிடம் கூறீ கண்ணீர் வடித்துள்ளார்.

 • Share this:
  தென்காசியில் பிச்சைக்காரரிடம் இருந்து லட்சக்கணக்கில் திருடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகையா. காலில் ஏற்பட்ட பிரச்னை வயது முதிர்வு காரணமாக கடந்த 10 வருடங்களாக சங்கரன்கோவில் சுற்று வட்டாரப்பகுதிகளில் யாசகம் பெற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். வயிற்றுப்பசி, மருத்துவச் செலவுகளை யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு கவனித்து வந்துள்ளார். தன்னுடைய செலவுகள் போக மீதமுள்ள பணத்தை மூட்டையாக கட்டி தலையில் சுமந்துக்கொண்டே இருப்பார்.

  Also Read: 9 வயது சிறுவனின் சொல்லுக்கு கட்டுப்படும் 427 மலைகிராமங்கள் - மலைவாழ் மக்களின் நம்பிக்கையும் ஆச்சர்யமும்

  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தலையிலிருந்த மூட்டையை சங்கரன்கோவலில் உள்ள டீக்கடையின் முன்பு வைத்துவிட்டு உள்ளே சென்று டீ குடிக்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மூட்டையை காணவில்லை. பக்கத்து கடைக்காரர்கள், அருகில் இருந்தவர்களிடம் தன்னுடைய மூட்டை குறித்து விசாரித்துள்ளார். யாருக்கு அவரது மூட்டையை குறித்து தெரியவில்லை. அந்த மூட்டையில் சிறுக சிறுக சேர்ந்த பணம் இரண்டு லட்சம் இருந்ததாக கடைக்காரர்களிடம் கூறீ கண்ணீர் வடித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் சண்முகையா மூட்டையை கடை முன்பு இறக்கி வைத்து விட்டு உள்ளே செல்வது. அதனை மர்ம நபர் ஒருவர் தூக்கிச்சென்றதும் தெரியவந்தது. மூட்டையை தூக்கிச் சென்ற நபரை அடையாளம் கண்ட போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.  விசாரணையில் அந்த நபர் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. தொடர்விசாரணையில் அதேப்பகுதியை சேர்ந்த சீனிவாசன், உலகநாதன் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த ஆகிய நான்கு பேரும் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது. நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: