Home /News /tamil-nadu /

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா

வெற்றியை தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பாக சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கவுள்ளார்

    ஆசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று, சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா வெண்கலப் பதக்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி துருக்கி நாட்டில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பாக சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினரான ராஜா பங்கேற்றார். சிறப்பான திறமையை வெளிப்படுத்திய ராஜா வெண்கலப் பதக்கத்தை வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    முன்பு மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று எம்எல்ஏ ராஜா அசத்தியிருந்தார். இதன் அடிப்படையில் அவர் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். இந்த போட்டிகள் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்பூலில் நடத்தப்பட்டன.

    140 கிலோ எடைப்பிரிவில் ராஜா எம்எல்ஏ போட்டியை எதிர்கொண்டார். இதில் அவர் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

    இந்த வெற்றியை தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பாக சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி