• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சங்கரன்கோவில் அருகே கண்மாயில் அடையாளம் தெரியாத நபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுப்பு!

சங்கரன்கோவில் அருகே கண்மாயில் அடையாளம் தெரியாத நபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுப்பு!

சங்கரன்கோவில் அருகே கண்மாயில் அடையாளம் தெரியாத நபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுப்பு!

சங்கரன்கோவில் அருகே கண்மாயில் அடையாளம் தெரியாத நபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுப்பு!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றி தொடர் விசாரணை செய்தனர்.

  • Share this:
    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண்மாயில் அடையாளம் தெரியாத நபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையன்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பல்வேறு வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் குருவிகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இச்சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றி தொடர் விசாரணை செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தனியார்  வாகனம் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியின் வெகு தூரத்திற்கு அப்பால் ஒரு கார் ஒன்று அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டதை கண்ட போலீசார் அந்தக் கார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பதிவு எண் கொண்ட கார் என்று அறிந்தனர்.

    Also read: கோவை அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – 5 பேர் கைது!

    தொடர்ந்து,  காரில் கடத்தி வந்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்டார அல்லது வேறு ஏதேனும் காரணமா இவர் யார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    செய்தியாளர் - ச.செந்தில்,

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: