• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக பிரமுகர் மகன் வெட்டிப்படுகொலை - காவல்துறையினர் குவிப்பால் பதற்றம்

அதிமுக பிரமுகர் மகன் வெட்டிப்படுகொலை - காவல்துறையினர் குவிப்பால் பதற்றம்

கொலை செய்யப்பட்ட நபர்

கொலை செய்யப்பட்ட நபர்

சங்கரன்கோவிலில் அதிமுக பிரமுகரின் மகன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டிப் படுகொலை காவல்துறை குவிப்பால் பதற்றம்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை என்பவரது மகன் இளங்கோ (ஆட்டோ டிரைவர்) சென்னையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று உள்ளது சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க வந்த நிலையில் நேற்று இரவு பலபத்திராமபுரம் குளக்கரையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டுள்ளார்.

    இச்சம்பவம் பற்றி தகவலறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான ஆட்டோ ஓட்டுனர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் ரிக்கி மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து குற்றவாளி யார் என்பதை தேடி வருகின்றனர்.

    Also Read:  குழந்தைகளை கொன்று இரத்தம் குடித்த சீரியல் கில்லர் - சிறையில் இருந்து தப்பிய கொடூரன் சடலமாக கண்டெடுப்பு

    மேலும் இச்சம்பவம் குடும்ப பிரச்சனையா, இடப்பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் சொந்த தகராறு காரணமாக நடந்ததா என்ற  கோணத்தில்  ஊத்துமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: ச.செந்தில் ( தென்காசி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: