தின்பண்டம் என நினைத்து கிளீனிங் பவுடர் தின்ற 5 வயது சிறுமி; அடையாளம் தெரியாத வகையில் உடல் மெலிந்த சோகம்!

தின்பண்டம் என நினைத்து கிளீனிங் பவுடர் தின்ற 5 வயது சிறுமி; அடையாளம் தெரியாத வகையில் உடல் மெலிந்த சோகம்!

பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி, அங்கு வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வைத்திருந்த கிளீனிங் பவுடரை தின்பண்டம் என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

  • Share this:
    தின்பண்டம் என நினைத்து கிளீனிங் பவுடர் தின்ற 5 வயது சிறுமி அடையாளம் தெரியாத வகையில் உடல் மெலிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு உரிய சிகிச்சையளிக்க தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் கேசிரோடு வாட்டர் ஹவுஸ் கீழ்புறம் பகுதியை சேர்ந்த சீதாராஜ் (43) பிரேமா (35), இருவரும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர் இவர்களுக்கு தனம் (12), இசக்கியம்மாள் (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் சிறுமி இசக்கியம்மாள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள் அப்போது அங்கு வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வைத்திருந்த கிளீனிங் பவுடரை தின்பண்டம் என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் சிறுமி உணவு மற்றும் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் சிகிச்சை செய்யப்பட்டு, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி ஓரளவு குணமடைந்ததாக கூறி கடந்த மாதம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் சிறுமி இசக்கியம்மாள் எதுவும் சாப்பிட முடியாமால் எடை குறைந்து உடம்பு மெலிந்து வந்ததால் அருகில் உள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    Also read: குழந்தைகளில் கொரோனா, டெங்கு அறிகுறிகள் பிரித்தறிய முடியுமா? மருத்துவர்கள் விளக்கம்

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் கூறும்போது, சிறுமியின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து காணப்படுகிறது. மேலும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் போதிய பலன் அளிக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையீட்டு சிறுமியின் நோய்க்கான சிகிச்சை அளித்து மீட்டு தரும் படி தெரிவித்தனர்.

    செய்தியாளர் - ச.செந்தில்,
    Published by:Esakki Raja
    First published: