Home /News /tamil-nadu /

குற்றால அருவியில் குளிக்க 3 நாள் தடை

குற்றால அருவியில் குளிக்க 3 நாள் தடை

குற்றால அருவி

குற்றால அருவி

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி குற்றாலத்தில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    குற்றால அருவியில் வரும் 31.12. 2021 முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று தினங்களுக்கு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுநோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றுருவி ஆகியவற்றில் வருகிற 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

    Read More : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை

    எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Must Read : தமிழகத்தில் ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மேலும், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Courtallam

    அடுத்த செய்தி