• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 5 ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறையில் தற்காலிகமாக பணி புரிவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர் சேகர்பாபு

5 ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறையில் தற்காலிகமாக பணி புரிவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

திமுக ஆட்சியில் கோவில் நிலங்களை மீட்கும் பணியானது முன்கூட்டியே அறிவித்து நடைபெற்று வருகிறது. கடந்த 55 நாட்களில் 79.5 ஏக்கர் கோவில்களுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

  • Share this:
    5 ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறையில் தற்காலிகமாக பணி புரிவோர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு பணியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஈடுபட்டார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, கொரோனா பெரும் தொற்று காரணமாக கோவில்கள் நீண்ட நாள் மூடபட்டு இருந்தது. ஆனால் தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆட்சி காலத்தில் 3500 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 8000 கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டு இருந்தால் அவ்வாறு உண்மையிலேயே மீட்கப்பட்டு இருந்தால் அவற்றின் பட்டியலை வெளியிட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது திமுக ஆட்சியில் கோவில் நிலங்களை மீட்கும் பணியானது முன்கூட்டியே அறிவித்து நடைபெற்று வருகிறது. கடந்த 55 நாட்களில் 79.5 ஏக்கர் கோவில்களுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது அவற்றின் மதிப்பு 520 கோடி ஆகும்.

    கோயில்களில் உள்ள திருமண மண்டபங்களில் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடக்க தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 4 கோடி பக்கம் உள்ள ஆவணங்கள் தற்போது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதைப்போல் கோவில் நிலங்களில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்கள், கோவில்களின் வரவு செலவு கணக்குகள் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியிடப்படும்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

    Also read: ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

    எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்ட அறிக்கையில் 40000 நபர்களுக்கு அறநிலையத்துறையில் பணி வழங்குவதற்கான விவரங்களை திரட்டி வைத்ததாகவும், ஆனால் தற்போதைய இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அவர்களை விடுவிக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

    அறநிலையத் துறையில் பணியாற்றுபவர்கள் மொத்த எண்ணிக்கை 1 லட்சம் தான் எனவே அது உண்மைக்கு புறம்பான கருத்து எனவும், அவ்வாறு உண்மையிலே நடந்து இருந்தால் அவர்களில் பட்டியல் வெளியிட வேண்டும் எனக் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: