திருச்சியில் தேர்தலை முன்னிட்டு 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு!

திருச்சியில் தேர்தலை முன்னிட்டு 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு!

தற்காலிக பேருந்து நிலையம்

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில்  3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களுக்காக தமிழ்நாடு அரசுப் பேருந்துகள்  கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதையடுத்து திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தீபாவளி, பொங்கல் திருநாளுக்கு உள்ளது போல்,போக்குவரத்துக் கழகம், மாநகராட்சி, காவல் துறையின் ஒருங்கிணைப்பில், திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் இன்று முதல் 7ம் தேதி  செயல்படும்.

இதன்படி, மத்திய பேருந்து நிலையம் அருகே (சோனா மீனா திரையரங்கு எதிரில்),மன்னார்புரம்,இலுப்பூர் சாலை ஆகிய 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Also read... தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா வந்தாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

வழித்தடமும் தற்காலிக நிலையங்களும்:

தஞ்சாவூர், கும்பகோணம் வழித்தடம் - மத்திய பேருந்து நிலையம் அருகே (சோனா மீனா திரையரங்கு எதிரில்)

புதுக்கோட்டை, காரைக்குடி வழித்தடம் - இலுப்பூர் சாலை (மன்னார்புரம் சிக்னல் அருகே),

மதுரை, நெல்லை வழித்தடம் - மன்னார்புரம் 4 ரோடு.
மேலும், மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: