தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தோட்டம்

ஊரடங்கு தளர்வு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பொது தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் வழிபாட்டு தலங்கள், பேருந்துகளை தூய்மைப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. மக்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் அனைத்து அனைத்து மாவட்டங்களிலும் கோயில்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், பழனியில் கோயில்களில் தூய்மைப் பணி நடைபெற்றது. பழனி மலைக்கோயில், அடிவாரம் திருஆவினன்குடி கோயில்களில் பிரகாரங்கள் கழுவப்பட்டு பக்தர்கள் இடைவெளியுடன் நிற்கும் வகையில் தரைத்தளத்தில் கட்டங்கள் வரையப்பட்டன. மேலும், தங்கும் விடுதி வளாகம் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.



    ALSO READ  | இது ஒரு நிர்வாண காடு... இங்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும், தூய்மைப் பணி நடைபெற்று, பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அறநிலையத் துறைக்கு உட்பட்ட மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம், வெக்காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

     



     

    ALSO READ  |  ஸ்டாலின் தான் வராரு... வைரலாகும் முதல்வர் சைக்கிள் பயணம்

    இன்று முதல் தமிழகத்தின் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளன.

     
    Published by:Sankaravadivoo G
    First published: