• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தெய்வத்துக்காக எந்த விமர்சனத்தையும் திமுக சந்திக்கும் - அமைச்சர் சேகர் பாபு

தெய்வத்துக்காக எந்த விமர்சனத்தையும் திமுக சந்திக்கும் - அமைச்சர் சேகர் பாபு

சேகர்பாபு

சேகர்பாபு

கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுக்கப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளன.

  • Share this:
    கோவில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் எனில் அதற்காக எந்த விமர்சனத்தையும் திமுக எதிர்கொள்ளும் எனவும், நகைகளை உருக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்து, வீர வசந்தாராயர் மண்டப புனரமைப்பு பணிகளையும் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். உடன், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இருந்தனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசிய போது, "மீனாட்சி அம்மன் கோவிலில் 2018 ஆம் ஆண்டு தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதிகளுக்கு பல முறை டெண்டர் அறிவித்தும் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. எனவே, டெண்டர் ஒப்படைப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து 3 ஆண்டுகளுக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    Also Read : மழை காலம் வருது... முன்னெச்சரிக்கையாக சென்னை ஏரிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    வீர வசந்தராயர் மண்டப பணிகளின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் ஆகம விதி சிக்கல் உள்ளதா என ஆராய்ந்து பக்தர்கள் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். அழகர்கோவில் பாதையை அகலப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால் அந்த பணிகள் விரைவு படுத்தப்படும்.

    சோளிங்கர் மற்றும் அய்யர் மலை கோவில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதனை தொடர்ந்து மேலும் 5 கோவில்களுக்கு ரோப்கார் சேவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் ஒன்று கூட கடந்த ஆட்சியில் மீட்கப்படவிலை. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. கோவில் நிலங்களில் நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து இறுதி செய்யப்படும்.

    கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுக்கப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளன. அதில் தெய்வங்களுக்கு பயன்படுவதை நேரடியாக பயன்படுத்தவும், பயன்படுத்த இயலாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வைப்பு நிதியை கோவில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தவே திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை 3 மண்டலங்களாக பிரித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணிகள் நடைபெறும்.
    கோவில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க தயார்.
    நகைகளை உருக்கும் நடவடிக்கையில் எந்தவித லாப நோக்கும் இல்லாமல் நேர்மையாக, உண்மையாக, தூய்மையாக அரசு செயல்படும்" என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: