சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கோயில் அர்ச்சகர் கைது

மகளிர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டதும் சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டதாக தெரியவந்தது.

சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கோயில் அர்ச்சகர் கைது
மாதிரி படம்
  • Share this:
சென்னை மடிப்பாக்கத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கோயில் அர்ச்சகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து  வந்தவர் சிவக்குமார்(59). இவர் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி பின்புறம் உள்ள அன்புக்குறிய அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார்.

அர்ச்சகர் சிவக்குமார் நேற்றைய முன்தினம் வீட்டில் இருந்தபோது அதே குடியிருப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமி பெற்றோரிடம் புகார் அளித்துள்ளது.


பின்னர் சிறுமியின் பெற்றோர் வீட்டு உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை பற்றி எடுத்து கூறியுள்ளார். பின்னர் வீட்டு உரிமையாளர் அர்ச்சகர் சிவக்குமாரை வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் அர்ச்சகர் சிவக்குமரை தேடிவந்தனர்.

சிறுமியிடம் தான் தவறுதலாக நடந்து கொண்ட விசயம் அவரது பெற்றோர்க்கு தெரிந்துவிட்டது என்பதை தெரிந்துகொண்ட அர்ச்சகர் சிவக்குமார் யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடலாம் என்று எண்ணி அதிகாலை சுமார் 5 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.அர்ச்சகர் வீட்டிற்கு வந்ததை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர்கள், அவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய சிவக்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் மகளிர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டதும் சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டதாக தெரியவந்தது.

பின்னர் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அர்ச்சகர் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading