4 மாவட்ட கோயில்களில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி..தனிமனித இடைவெளியுடன் தரிசனம்

கோயில்களில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு இறைவனை தரிசிக்க அனுமதி வழங்கப் பட்டு வருகின்றது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 4 மாவட்டங்களில் கோயில்களில் பக்தர்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில்  27 மாவட்டங்கள் மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து சேவை தொடங்கியது. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன.

  Also Read: கோவையில் பழங்குடியின குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி பெண் - மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்து

  கொரோனா தொற்று குறைவாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களிலும் இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. ஆலயங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, தடுப்பு கட்டைகள் போடப்பட்ட ன. பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க 2 மீட்டர் இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு இறைவனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

  Kerala: Few devotees attend Sunday prayers at a church in Kottayam due to COVID-19 restrictions

  Public gathering up to 15 allowed in temples, mosques, and churches at a given time as per the new template for the unlock process pic.twitter.com/FZuf3hXdDr

  — ANI (@ANI) June 27, 2021  கேரளாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பன்றி வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  இதனால், மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மசூதி, கோயில், தேவாலயங்களில் குறைந்த அளவில் மக்கள் வழிபாடு செய்தனர்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: