தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம் - தேரோட்ட விழா நடைபெறாது என அறிவிப்பு!

கோப்புப் படம்

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்ட விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000  ஆண்டுகள் மேல்  பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

  Also read... ரமலான் மாதத்தை முன்னிட்டு ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

  கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவையால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ரிஷப சின்னம் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

  இந்நிலையில் நேற்று கொரோனா கட்டுபாட்டு விதிகளில் தமிழக அரசு கோவில்களில் திருவிழாக்கள் நடத்த கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில், பெரிய கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தடை உத்தரவு காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  - செய்தியாளர்: எஸ்.குருநாதன்   உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: