நடப்பாண்டில் மே மாதத்தின்போது வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. வெப்பநிலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்ரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’கோடை வெயில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளது. மே மாதத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும்.
நாட்டின் சில பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவை காட்டிலும் 6 டிகிரி அதிகமாகும்.
இதையும் படிங்க - கோடையிலும் கொட்டும் பழைய குற்றால அருவி... குதூகலமாய் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
வெப்பநிலை உயர்வால் சுகாதார பாதிப்புகள் ஏற்படலாம். இதனை எதிர்கொள்வதற்கு மாநில அரசுகள் தயாராக வேண்டும். இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மார்ச் 15-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாநில அரசில் குறிப்பாக சுகாதாரத்துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரை மருத்துவர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க - மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்… போலீசில் பிடிபட்டது எப்படி?
ஐஸ் பேக்ஸ், ஓ.ஆர்.எஸ். பவுடர் போன்ற அடிப்படை மருந்துப் பொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகளவு தண்ணீரை அருந்த வேண்டும். போதுமானவரை தங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மின் தேவைகள் அதிகம் ஏற்படலாம். இதனால் மாநில அரசுகள் போதுமான அளவுக்கு சோலார் பேனல்களை இன்ஸ்டால் செய்து தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும். வானிலை நிலவரங்களை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து, மக்கள் செய்ய வேண்டியது, தவிர்ப்பது குறித்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்.
ஒத்துழைப்படன் செயல்படுவதன் மூலம் நாம் இந்த வெப்பத்தை வெல்லலாம்.
இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.