Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

வட உள்தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று வட உள்தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தொடர்ந்து, நாளை முதல் 03.04.2022 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோவை பேரூராட்சி தலைவர் தேர்தலில் மோதல்.. திமுகவினரை தாக்கியதாக அதிமுகவினர் 9 கைது!

    30.03.2022 முதல் 01.04.2022 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி