HOME»NEWS»TAMIL-NADU»telungana governor request to tamilnadu chief minister tmn
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தமிழக முதல்வருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கோரிக்கை..
பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையை பள்ளிகளில் கற்று கொடுக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணையில் உள்ள எம்.ஜி.ஆர் தொடக்கப்பள்ளியில் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் வைத்து வழிபட்டார். அதனைத் தொடர்ந்து சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை. பார்வையிட்டார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் அவசியம். எனவே தமிழக முதல்வருக்கு இதை நான் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இதே கோரிக்கையை தெலுங்கானா முதல்வரிடமும் தான் கோரிக்கை வைத்ததாகவும் விழாவில் தமிழிசை குறிப்பிட்டார். மேலும் எம்.ஜி.ஆர்பற்றிய பல பாடல்களை மேடையில் பாடி விழாவில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.