Home /News /tamil-nadu /

விஜயகாந்த் பிறந்தநாள்.. திரைப்படங்களின் பெயரை வைத்தே வாழ்த்து கூறிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

விஜயகாந்த் பிறந்தநாள்.. திரைப்படங்களின் பெயரை வைத்தே வாழ்த்து கூறிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

Vijayakanth Birthday: "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - தமிழிசை சௌந்தரராஜன்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தேமுதிமு தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த திரைப்படங்களின் பெயரை வைத்து தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரைப்பட பிரபலங்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ள வாழ்த்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில், வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும்,



    அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMDK, Tamilisai Soundararajan, Vijayakanth

    அடுத்த செய்தி