ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக பிரமுகர் வாங்கிய லோன்.. தமிழிசை போட்டோவை ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் கும்பல் அட்டூழியம்

பாஜக பிரமுகர் வாங்கிய லோன்.. தமிழிசை போட்டோவை ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் கும்பல் அட்டூழியம்

மாதிரி படம்

மாதிரி படம்

பாஜக பிரமுகர் ஒருவர் பெற்ற 5,000 ரூபாய் கடனுக்காக லோன் ஆப் கும்பல் இந்த வேலையை செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Telangana

ஆளுநர் தமிழிசையின் உருவப்படத்தை ஆபாசபடமாக சித்தரித்து வெளியிட்டுள்ள லோன் ஆப் மோசடி கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

லோன் ஆப் மோசடி என்பது நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய மோசடியாக உருவெடுத்து வருகிறது. அவசர தேவைக்காக சிலர் ஆபத்தை அறியாமல் லோன் ஆப்பில் கடன் வாங்குவதும் பின் அவர்கள் மொபைலை ஹேக் செய்து அந்நபர் மற்றும் அவர்களின் மொபைலில் உள்ள புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி அதிக அளவில் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநரும் பாஜக நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் மோசடி கும்பல் வெளியிட்டுள்ள படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த நபர் ஒருவர் லோன் ஆப்பில் வாங்கிய கடனுக்காக அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்த புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநரும் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளது லோன் ஆப் மோசடி கும்பல்.

ALSO READ | நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சம்மன்...

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் டெல்லி கோபி(43). இவர் பாஜகவின் முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி டெல்லி கோபி ராயல் கேஷ் ஆப் மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த கடனுடைய தேதி நேற்றுடன் முடிவடையவே ஒரு நாள் காலதாமதம் ஆகிய காரணத்தினால் அவருடைய தொலைபேசி முழுவதும் ஹேக் செய்யப்பட்டு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நபருடன் இருந்த கோபியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கோபி தேடப்படும் குற்றவாளி எனவும் பதிவு செய்து டெல்லி கோபியின் தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கோபி, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Dr tamilisai soundararajan, Loan app, Tamilisai, Tamilisai Soundararajan, Telangana