முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்! ரயில்வே வாரியம் அறிவிப்பு!

தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்! ரயில்வே வாரியம் அறிவிப்பு!

தேஜஸ் ரயில்

தேஜஸ் ரயில்

தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்விற்கு நன்றி - எல்.முருகன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் விரைவு ரயில் சென்னை எக்மோரில் தொடங்கி இடையில் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த அதிவிரைவு ரயிலை மேலும் சில நிறுத்தங்களில் நிறுத்தி சென்றால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தேஜஸ் ரயில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 26 முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆன, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்.

தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்விற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Indian Railways, L Murugan, Tejas Express