• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விமானப்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன தேஜாஸ் மார்க்-1 FOC போர் விமானம் - சிறப்புகள் என்னென்ன?

விமானப்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன தேஜாஸ் மார்க்-1 FOC போர் விமானம் - சிறப்புகள் என்னென்ன?

தேஜஸ் போர் விமானம்

தேஜஸ் போர் விமானம்

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட அதிநவீன தேஜாஸ் மார்க்-1 FOC போர் விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவின் 18-ஆவது விமானப்படை அணி மறு உருவாக்கம் செய்யப்பட்டு, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. ஃபிளையிங் புல்லட்ஸ் என்ற இந்த படைப்பிரிவில், தேஜாஸ் மார்க்-1 எஃப்.ஓ.சி. ரக போர் விமானம் இணைக்கப்பட்டுள்ளது.

    சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படை தலைவர் ஏர்சீஃப் மார்ஷல் பதோரியா, அந்த விமானம் இருந்த அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    பின்னர், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய முறைப்படி சர்வ தர்ம பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அதி நவீன தேஜாஸ் மார்க்-1 எஃப்.ஓ.சி. தர போர் விமானம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர், விமானப்படை ஹெலிகாப்டர், போர் விமானங்களிம் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதையடுத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தினர், புதிய தேஜாஸ் போர் விமானத்தின் ஆவணங்கள் ஏர்சீஃப் மார்ஷல் பதோரியாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் பேசிய பதோரியா, இந்த விமான தயாரிப்பில் தனியார் மற்றும் சிறு, குறு உற்பத்தியாளர்களின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.

    இலகு ரக தேஜாஸ் விமானம் இந்திய விமான மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

    இலகு ரக தேஜாஸ் மார்க்-1 போர் விமானம் முதன்முறையாக எஃப்.ஓ.சி. தர நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 4-ஆவது தலைமுறை போர் விமானமான இது, போர் விமானங்களிலேயே சிறிய மற்றும் எடை குறைந்தது.

    ஐ.ஓ.சி. தர தேஜாஸ் விமானத்தில் 1,200 மற்றும் 800 லிட்டர் எரிபொருள் டேங்குகள் உள்ள நிலையில், புதிய எஃப்.ஓ.சி. தேஜாஸ் விமானத்தில் கூடுதலாக 725 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது.

    நடுவானிலேயே மற்றொரு விமானத்தில் இருந்து எரிபொருள் நிரப்பிக்கொள்ளும் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது, 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய அஸ்த்ரா ஏவுகணையை தாங்கிச் செல்லும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மிகக்குறைவான வேகத்திலும் எதிரே வரும் ஏவுகணையில் இருந்து தப்பிச்செல்லும் அளவிற்கு இந்த விமானம் திறன் படைத்தது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: