தென் சென்னை தொகுதியில் 75,000 வாக்காளர்கள் பெயர் நீக்கம்! தெஹ்லான் பாகவி அதிர்ச்சித் தகவல்

கடந்த மாதம் வரை அவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தநிலையில், இந்த தேர்தலில் எந்தவித முன் அறிவிப்புமின்றி அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தென் சென்னை தொகுதியில் 75,000 வாக்காளர்கள் பெயர் நீக்கம்! தெஹ்லான் பாகவி அதிர்ச்சித் தகவல்
தேர்தல் ஆணையம்
  • Share this:
மத்திய சென்னை தொகுதியில் 40,000 இஸ்லாமிய வாக்காளர்கள் உள்பட 75,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் தெஹ்லான் பாகவி புகார் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுமுடிந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் துணைத் தலைவரும் மத்திய சென்னை தொகுதியின் வேட்பாளருமான தெ தெஹ்லான் பாகவி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘தென் சென்னை தொகுதியில் அ.ம.மு.க கூட்டணியில் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் நான் போட்டியிட்டேன். வேட்பாளர் என்ற முறையிலே நான் ஒவ்வொரு பூத்களுக்கும் சென்று பார்வையிட்டேன். அப்பொழுது, கடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள், இத்தேர்தலில் தங்களின் பெயர் விடுபட்டதாக கூறி, தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தபோது, கடந்த மாதம் வரை அவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தநிலையில், இந்த தேர்தலில் எந்தவித முன் அறிவிப்புமின்றி அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனக்கு கிடைத்த தகவலின்படி, தென் சென்னை தொகுதி முழுவதும் சுமார் 40,000 இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 75,000 வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளது என்று தெரிகிறது.

பொதுவாகவே, தேர்தலின்போது, இறுதி செய்யப்பட்ட வாக்காளர்களை அனுமதிக்கக்கூடிய தேர்தல் அதிகாரி, எவ்வாறு பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் முறையிட்ட பிறகு அனுமதிப்பதும், முறையிடாமல் இருக்கும் பட்சத்தில் அனுமதி மறுப்பதும் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் கூற கடமைப்பட்டுள்ளது.

விடுபட்டுள்ள 75,000 வாக்காளர்கள் பெயர்களை பட்டியலின் இணைக்க வேண்டும். இத்தனை வாக்களார்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை விசாரிக்கக்கோரியும், அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Also see:

First published: April 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading