துபாயிலிருந்து ரூ.44.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இளம்பெண் கைது!

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.44.5 லட்சம் மதிப்புடைய 926 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த இளம் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 • Share this:
  துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது கா்நாடகா மாநிலம் பெங்களூரை சோ்ந்த வேலண்டினா மேரி(27) என்ற இளம் பெண்,தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு,கீரின் சேனல் வழியாக வெளியே சென்றாா்.ஆனால் சுங்கத்துறையினருக்கு இளம் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

  அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து அவருடைய உடமைகளை சோதனையிட்டனா்.உடமைகளில் எதுவும் சிக்கவில்லை.ஆனாலும் சந்தேகம் தீரவில்லை. இதையடுத்து பெண் சுங்கத்துறையினா் தனி அறைக்கு அழைத்து சென்று இளம் பெண்ணை சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைகளுக்குள் தங்க பேஸ்ட் பாக்கெட்களை மறைத்துவைத்திருந்தாா்.மொத்தம் 926 கிராம் தங்கத்தை கைப்பற்றினா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.44.5 லட்சம்.  இதையடுத்து சுங்கத்துறையினா் பெங்களூா் இளம் பெண் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: