நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்தியக் குழு 30ம் தேதி தமிழகம் வருகை

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்தியக் குழு 30ம் தேதி தமிழகம் வருகை

நிவர் புயல் பாதிப்பு

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி தலைமையிலான மத்தியக் குழு வரும் 30ம் தேதி இரவு தமிழகம் வரவுள்ளது.

  • Share this:
தமிழகத்தை அச்சுறுத்திய நிவர் புயல் நவம்பர் 26ம் தேதி கரையைக் கடந்தது. புயல் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழந்தது குறித்து மதிப்பீடு செய்து நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனிடையே நேற்று நிவர் புயல் பாதிப்புகள் குறித்து இந்திய பிரதமர் மோடி, முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். அத்தோடு, புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய மத்தியக் குழு அனுப்பி வைக்கப்படும் எனவும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

Also read: டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் - புகைப்படங்கள்

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி தலைமையில் மத்திய வேளாண்மை, சாலை போக்குவரத்து, நிதி, மின்துறை, ஊரக வளர்ச்சி, நீர் மேலாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த ஏழு அதிகாரிகள் எதிர்வரும் 30ம் தேதி இரவு தமிழகம் வரவுள்ளனர்.

இவர்கள் டிசம்பர் 1ம் தேதி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்திய பின், தமிழகம் மற்றும் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளனர். ஆய்வுகளை முடித்துக்கொண்டு தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. மத்தியக் குழு ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும் அடிப்படையில் தமிழகத்துக்கான நிதி உதவி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: