முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive | ஆசிரியர்கள் டார்ச்சர் - கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் வெளியானது

Exclusive | ஆசிரியர்கள் டார்ச்சர் - கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் வெளியானது

ஆசிரியர்கள் டார்ச்சர் - கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் வெளியானது

ஆசிரியர்கள் டார்ச்சர் - கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் வெளியானது

வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்

  • Last Updated :

ஆசிரியர்கள் தான் சரியாக படிப்பதில்லை என டார்ச்சர் செய்ததாக கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நெசலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் படித்து வந்தார். கடந்த 13ம் தேதி மாணவி பள்ளியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற தொடர் போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுனர். இதனிடையே, 4வது நாளான நேற்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலைமை எல்லை மீறி செல்லவே, சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், ஆனால் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

top videos

    மேலும் , தான் சரியாக படிப்பதில்லை என மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார். தாய், தந்தைக்கு சாரி சொல்லி அவர் அந்த கடிதத்தை முடித்துள்ளார். இந்த கடித த்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    First published:

    Tags: Kallakurichi