Home /News /tamil-nadu /

மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவேண்டும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவேண்டும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் மாணவர்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தண்ணீர் குடிக்க இடைவேளை கொண்டு வந்து அந்த மாநில அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த குழந்தைகள் தின விளையாட்டு விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், மாணவர்கள் காலை, மாலை, சிறு இடைவேளை, மதிய உணவு என சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், தண்ணீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தண்ணீர் குடிப்பதால் உடல் வெப்பத்தை சீராக வைக்கும் என்றும், மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும், தசைப்பிடிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் தண்ணீர் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ள இயக்குனர், இதுகுறித்த தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கிக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லக்கூடிய அதிகாரிகள், மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை விசாரித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    Also see:


     
    Published by:Karthick S
    First published:

    Tags: Students, Water Break

    அடுத்த செய்தி