அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்களோடு மரக்கன்றுகளை வழங்கி அசத்திய ஆசிரியர்கள்

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே மாணவ, மாணவிகள் படித்து வரும் சூழ்நிலையில் கொடுக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளையும் நட்டு வைத்து பராமறித்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே மாணவ, மாணவிகள் படித்து வரும் சூழ்நிலையில் கொடுக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளையும் நட்டு வைத்து பராமறித்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

 • Share this:
  மணப்பாறை அருகே அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்களோடு மரக்கன்றுகளை வழங்கி ஆசிரியர்கள் அசத்தி வருகின்றனர்.

  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர்.

  அப்போது மாணவ, மாணவிகள் கல்வித் தொலைக்காட்சிகளின் நடைபெறும் பாடங்களை கவனித்து படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

  இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் 2 மரக்கன்றுகளை வழங்கினர். கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே மாணவ, மாணவிகள் படித்து வரும் சூழ்நிலையில் கொடுக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளையும் நட்டு வைத்து பராமறித்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

  பருவமழை தொடங்க உள்ள நிலையில் இந்த நேரத்தில் மரக்கன்றுகள் வழங்கினால் அவற்றை வளர்க்க எளிமையாக இருக்கும் என்பதன் அடிப்படையிலும் சுற்றுச்சூழல் ஆர்வம் மாணவ – மாணவிகள் மத்தியில் மேலோங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

  செய்தியாளர் - ராமன்
  Published by:Esakki Raja
  First published: