• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்: நீதிமன்றம்

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்: நீதிமன்றம்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என்றும் நீதிபதிகள் கூறினர். 

  • Share this:
    மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று கூறியுள்ள  சென்னை உயர் நீதிமன்றம்  சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

    பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மார்க்கெட், திரையரங்கம் பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம் ,  ஹோட்டல், ஹாஸ்டல், தங்கும் விடுதிகள், சத்திரங்கள், கிளப்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவை  போன்ற இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், அறம் அறக்கட்டளையின் தலைவரான ஏ. உமர் பாருக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,கல்வி நிறுவனங்களை சார்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என்று கோரியிருந்தார்.

    தடுப்பூசிக்கு பக்கவிளைவுகள் இல்லை என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதியளிக்காத நிலையிலும், சிலர் இயற்கை மருத்துவத்தை நாடும் நிலையிலும் தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: ஜெய்பீம் : பாம்பு, எலிகளுடன் மு.க.ஸ்டாலின், சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த பழங்குடி மக்கள்


    இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிற்காலத்தில் மாற்று கூட வரலாம். மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்.

    சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என்றும் நீதிபதிகள் கூறினர்.தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டுமென உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ள நிலையில், வழக்கு பொது நலனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம்  தெரிவித்தது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மேலும் படிங்க: வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளம் : மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: