ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர உத்தரவு - பள்ளிக்கல்வி துறை

கோப்பு படம்

தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி உள்ளது.

 • Share this:
  மாணவர்கள் சேர்க்கை பணிகள் தொடங்கி உள்ளதால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வர பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

  தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்கு வர வேண்டுமென ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

  இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் தலைமை ஆசரியர்க்கு உதவியாக இருப்பதற்கு பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வர வேண்டுமென பள்ளிக்கல்வி துறை முதன்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

  Also Read : பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

  மேலும் 2020 -21 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறுவுறுத்துமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது என்றும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே ஒரே தீர்வு என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: