ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தமிழகத்திலிருந்து ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தமிழகத்திலிருந்து ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையினால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதினை பெறுவதற்கு ஆசிரியர்கள் nationalwardstoteachers.mhrd.gov.in என்கிற இணையத்தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில்  2019-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரடியாக ஜூலை 6-ஆம் தேதிக்குள் nationalwardstoteacheachers.mhrdgov.in என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.

மேலும் படிக்க...

அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு - 12 நாட்கள் என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?

2019ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும். அந்த வகையில்  2019 ஏப்ரல் 30ஆம் தேதி வரை பணிபுரிந்து இருக்க வேண்டும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Department of School Education, National award, Teacher