Home /News /tamil-nadu /

நெல்லை : இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை - மாணவர்கள் குற்றச்சாட்டு

நெல்லை : இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை - மாணவர்கள் குற்றச்சாட்டு

நெல்லை பள்ளி விபத்து

நெல்லை பள்ளி விபத்து

திருநெல்வேலியில் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.

    திருநெல்வேலி டவுன் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்றுள்ளனர். அப்போது கழிப்பறையை ஒட்டியிருந்த சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில் சில மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். காயத்துடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிக்கிக் கொண்ட மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்தில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் விஷ்வரஞ்சன், சஞ்சய் மற்றும் 9ம் வகுப்பு மாணவர் அன்பழகன் ஆகிய 3 மாணவர்கள் இந்த விபத்தில் பலியானதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

    Also Read : வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழகத்தில் ₹10 கோடி மோசடி செய்த மென்பொறியாளர்கள்

    மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்த மாணவர்கள் யார் என்பதும், காயமடைந்த மாணவர்கள் யார் என்பதையும் சொல்லாமல் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக இருப்பதால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விபத்து நடந்ததையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Nellai, Tirunelveli

    அடுத்த செய்தி