கடந்த தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அளித்தது. அதனை பின்பற்றி தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்களினால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. குறைவான ஊதியம் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விதிமுறையை திருத்தி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி புதிய அரசாணையை அமுல் செய்யவேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பணி நிரந்தர கோரிக்கை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளித்து அதனை பின்பற்றி தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து வலியுறுத்தினர்.
அவர்களிடம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முயற்சிகள் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் நடத்தும் மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்க வேண்டுமென்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர். இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டு மாநாட்டில் கலந்துகொள்ள தேதி அளிக்க முன்வந்துள்ளதாக பகுதிநர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read : ஆளுநர் - ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை - சீமான்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும் பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை 58 வயதிலேயே அவர்கள் பணி ஓய்வு பெற அரசு தெரிவிப்பதால் பல பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய பணி ஓய்வு பெறும் வயதை எட்டி ஓய்வு பெற்றுவிட்டனர்.
Also Read : பன்னீர்செல்வத்துக்கு ஓகே.. எடப்பாடி பழனிசாமிக்கு நோ: டிடிவி தினகரன்
கடந்த 10 ஆண்டுகளாக பணி நிரந்தரத்தை வலியுறுத்தி போராடிய போதும் அரசு தங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை அதனால் பலர் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடனான சந்திப்பு தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று திமுக அறிவித்துள்ளதால் அதனை திமுக அரசு நிறைவேற்றும் என நம்புவதாகவும் கூறுகின்றனர். தாங்கள் கூட்டியுள்ள மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்க உறுதி அளித்து இருப்பதால் அந்த மாநாட்டில் தங்களுடைய கோரிக்கைகள் ஏதேனும் சில நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
Also Read : வயிற்றில் கத்திரிக்கோல் உடன் 12 ஆண்டுகள் அவதி: பெண்ணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை முழுவதும் அரசு உணர்ந்துள்ளதாகவும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.