அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட திருத்த மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட திருத்த மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும் என, அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட திருத்த மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழகம்.
  • News18
  • Last Updated: September 29, 2020, 6:14 PM IST
  • Share this:
இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அருள் அறம் பேசுகையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து பெயரை மாற்றுவது ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், கடிதத்தின் பிரதி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



Also read... ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு


மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக தாங்கள் சட்ட போராட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக முடிவெடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading