ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

மாதிரிப் படம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும்  தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2 தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 • Share this:
  தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பது தொடர்பாக அரசு  திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல்  அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், மாணவர்கள் சேர்க்கைப் பணி,  பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல்,விலையில்லா  பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கி அவற்றை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: ஆடிமாத பூஜை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!


  அரசு மற்றும் அரசு உதவிபெறும்  தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2 தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: