ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி; ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

கோப்பு படம்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

 • Share this:
  தமிழத்ததில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே உள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19-ம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில் 31-7-2021 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

  கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

  தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

  Also read: கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: மனைவி கண்ணீர் புகார்!!

  மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

  நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

   
  Published by:Esakki Raja
  First published: